Monday, 11 November 2013

beejakshara mantra Swarna Aakarshana Bhairava Ashtakam







The following is the hymns in praise of Swarna Aakarshana Bairava composed by Sri Durga Sidhar and dedicated to Iluppaikkudi Swarna Aakarshana Bairava, near Karaikudi, Tamilnadu. 

 Whoever chants 18 times, Swarna Aaakarshana ashtakam on full moon day  with devotion and picure of Swarna Aakarshana Bairava in the evenings is believed to be conferred with immense wealth. Right time for this worship is 8 PM. Additionally this ashtakam is recommended for  Monday and Friday evenings. Offerings can be milk or milk payasam.


Prayer to Lord Vinayakar
மங்கலத்து நாயகனே மன்னாளும் முதலிறைவா 
பொங்குதன வயிற்றோனே பொற்புடைய ரத்தினமே 
சங்கரனார் தருமதலால் சங்கடத்தைச் சங்கரிக்கும் 
எங்கள் குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே 

அப்பமுடன் பொரிகடலை அவலுடன்அருங்கதலி 
ஒப்பில்லா மோதகமும் ஒருமனமாய் ஒப்பித்து 
எப்பொழுதும் வணங்கிடுவேன் என்னையாள வேண்டுமென 
அப்பனுக்கு  முந்திவரும் அருட்கனியே கணபதியே  

பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு 
எள்ளளவும் சலியாத எம்மனத்தை உமக்காக்கி 
 தெள்ளியனாய்த்  தெளிவதற்கு தெந்தமிழில் போற்றுகின்றேன்
உள்ளியதை உள்ளபடி உகந்தளிப்பாய்  கணபதியே

இன்றெடுத்த இப்பணியும் இனிதொடரும் எப்பணியும் 
நன்மணியே  ஷண்முகனார் தன்னுடனே நீ எழுந்து 
என்பணியை உன்பணியாய் எடுத்தாண்டு எமைக்காக்க 
பொன்வயிற்று கணபதியே போற்றியென போற்றுகின்றேன்    

SwarnaAkarshana Bhairavar Ashtakam 

ஸ்வர்ணாகர்ஷன  பைரவ அஷ்டகம் 
பண்:  நாத நாமகிரியை 
தனம்தரும் வயிரவன் தளிரடி பணிந்திடின் 
தளர்வுகள் தீர்ந்து விடும் 
மனந்திறன் தவன்பதம் மலரிட்டு வாழ்த்திடின்
மகிழ்வுகள் வந்து விடும் 
சினந்தவிர்த் தன்னையின் சின்மயப் புன்னகை
சிந்தையில் ஏற்றவனே
தனக்கிலை யீடு யாருமே என்பான் 
தனமழை பெய்திடுவான் 

 வாழ்வினிய வளந்தர வையகம் நடந்தான் 
வாரியே வழங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட 
தானென வந்திடுவான் 
காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நடந்தான் 
காவலாய் வந்திடுவான் 
தனக்கிலை யீடு யாருமே என்பான் 
தனமழை பெய்திடுவான் 

முழுநில வதனில் முறையோடு பூஜைகள் 
முடித்திட அருளிடுவான் 
உழுதவன் விதைப்பான் உடமைகள் காப்பான் 
உயர்வுகள் செய்திடுவான் 
முழுமலர் தாமரை மாலையை ஜெபித்து 
முடியினில் சூடிடுவான் 
தனக்கிலை யீடு யாருமே என்பான் 
தனமழை பெய்திடுவான் 

நான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பான் 
நான்முகன் நாநென்பான்
தேனினிலே பழத்தை சேர்த்தவன் ருசிப்பான்
தேவைகள் நிறைத்திடுவான் 
வான்மழை எனவே வளங்களை பொழிவான் 
வாழ்த்திட வாழ்த்திடுவான் 
தனக்கிலை யீடு யாருமே என்பான் 
தனமழை பெய்திடுவான் 

பூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான் 
பூரணன் நானென்பான்
நாதங்கள்  ஒலிக்கும் நால்வகை மணிகளை 
நாணிலில் பூட்டிடுவான் 
காதங்கள் கடந்து காட்டிடும் மாயம் 
யாவையும் போக்கிடுவான் 
தனக்கிலை யீடு யாருமே என்பான் 
தனமழை பெய்திடுவான் 

பொழில்களில் மணப்பான் பூசைகள் ஏற்பான் 
பொற்குடம் ஏந்திடுவான் 
கழல்களில் தண்டை கைகளில் மணியணி 
கனகனாய் இருந்திடுவான் 
நிழல் தரும் கற்பகம் நினைத்திட பொழிந்திடும் 
நின்மலன் நாநென்பான் 
தனக்கிலை யீடு யாருமே என்பான் 
தனமழை பெய்திடுவான் 

சதுர்முகம் ஆணவத் தலையினை கொய்தான் 
சத்தோடு சித்தனானான் 
புதரினில் பாம்பை தலையினில் வைத்தான் 
புண்ணியம் செய்யென்றான்
புதரினைக் குவித்து செம்பினை எரித்தான் 
பசும்பொன் இதுவென்றான் 
தனக்கிலை யீடு யாருமே என்பான் 
தனமழை பெய்திடுவான்

ஜெயஜெய வடுகனாதனே சரணம் 
வந்தருள் செய்திடுவாய் 
ஜெயஜெய க்ஷேத்திர பாலகனே சரணம் 
ஜெயங்களை தந்திடுவாய் 
ஜெயஜெய  வயிரவா செகம்புகழ் தேவா 
செல்வங்கள் தந்திடுவாய் 
தனக்கிலை யீடு யாருமே என்பான் 
தனமழை பெய்திடுவான் 

தன ஆகர்ஷன பைரவர் அர்ச்சனை 



ஓம் ஸ்ரீம் தன வயிரவா போற்றி 
ஓம் ஸ்ரீம் தத்துவ தேவா போற்றி 
ஓம் ஸ்ரீம் தயாளா போற்றி 
ஓம் ஸ்ரீம் தன நாதா போற்றி 
ஓம் ஸ்ரீம் தனத் தேவா போற்றி 
ஓம் ஸ்ரீம் குல தேவா போற்றி 
ஓம் ஸ்ரீம் குருநாதா பொறி 
ஓம் ஸ்ரீம் குண்டலினி தேவா போற்றி 
ஓம் ஸ்ரீம் குபேரா போற்றி 
ஓம் ஸ்ரீம் குணக்குன்றே போற்றி 
ஓம் ஸ்ரீம் வயிரவா போற்றி 
ஓம் ஸ்ரீம் வளந்தருவாய் போற்றி 
ஓம் ஸ்ரீம் வற்றாத தனமே போற்றி 
ஓம் ஸ்ரீம் வறுமையின் மருந்தே போற்றி 
ஓம் ஸ்ரீம் வனத்துறை வாழ்வே போற்றி 
ஓம் ஸ்ரீம் திருவுடைசெல்வா போற்றி 
ஓம் ஸ்ரீம் தினம்தினம் காப்பாய் போற்றி 
ஓம் ஸ்ரீம் திருமண தேவா போற்றி 
ஓம் ஸ்ரீம் திருவருள் திரண்டாய் போற்றி 
ஓம் ஸ்ரீம் திருவடி காட்டுவாய் போற்றி 
ஓம் ஸ்ரீம் சித்தர்கள் வாழ்வே போற்றி 
ஓம் ஸ்ரீம் சித்தருக்கு சித்தா போற்றி 
ஓம் ஸ்ரீம் சித்திகள் எட்டே போற்றி 
ஓம் ஸ்ரீம் சித்தாந்த வாழ்வே போற்றி 
ஓம் ஸ்ரீம் சித்திகள் முடித்தாய் போற்றி 
ஓம் ஸ்ரீம் முழுநிலவினாய் போற்றி 
ஓம் ஸ்ரீம் முனிவர்கள் மருந்தே போற்றி 
ஓம் ஸ்ரீம் முடியாதன முடிப்பாய் போற்றி 
ஓம் ஸ்ரீம் முழுதனம் தருவாய் போற்றி 
ஓம் ஸ்ரீம் முகிழ நகை வயிரவா போற்றி 
ஓம் ஸ்ரீம் இரும்பைப்  பொன்னாக்கினாய் போற்றி 
ஓம் ஸ்ரீம் இருந்தருள் செய்யவந்தாய் போற்றி 
ஓம் ஸ்ரீம் இலுப்பைக்குடி வயிரவா போற்றி 

இலுப்பைக்குடி வயிரவன் துணை 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...